Friday, September 30, 2011

இலங்கையின் மனித உரிமை நிலைமை குறித்து கனடா பகிரங்க அதிருப்தி வெளியிடடுள்ளது!

Friday, September 30, 2011
இலங்கையின் மனித உரிமை நிலைமை குறித்து கனடா பகிரங்க அதிருப்தி வெளியிடடுள்ளது. எதிர்வரும் மாதம் அவுஸ்திரேலியாவில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் முதல் தடவையாக இலங்கையின் மனித உரிமை விவகாரம் குறித்து கனடா நேரடியாக விமர்சனம் செய்துள்ளது.

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் தெரிவித்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பிலும் திருப்தியடைய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக மனித உரிமை விவகாரம் குறித்து அதிலும் இலங்கை விவகாரம் குறித்து கனடா தொடர்ச்சியாக குரல் கொடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்து இலங்கை இடைநிறுத்தப்பட வேண்டுமென கனேடிய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜிம் கிரியாஜியன்ஸ் கோரிக்;கை விடுத்துள்ளார்.

இதேவேளை, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும், யுத்த வலயத்தில் நல்லிணக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எனவும், பக்கச்சார்பான முறையில் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் அடுக்கபபட்டு வருவதாகவும் இலங்கை அரசாங்கம் விசனம் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment