
Sunday, September 18, 2011ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வலது குறைந்தோருக்கான மாதார்ந்த கொடுப்பனவு வழங்கும் வைபவம் (17.9.2011) நேற்று மாலை ஆரையம்பதி சமூக சேவைகள் மண்டபத்தில் நடைபெற்றது.
ஆரையம்பதி பிரதேச செயலாளர் எஸ்.தணபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பி.பிரசாந்தன், மற்றும் ஆரையம்பதி சமூக சேவை உத்தியோகத்தர்களான கே.கலாதேவன், டி.அம்பிகாவதி உட்பட கிராம உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 27 வலது குறைந்தோருக்கு தலா ஒருவருக்கு மாதாந்தம் மூவாயிரம் ரூபா வீதம் 24,000ரூபா வழங்கப்பட்டன.
இப்பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்கனவே ஏழு பேர் இக்கொடுப்பனவை பெற்றுவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment