Sunday, September 18, 2011

செல்லாக் காசாகிய நிபந்தனையும் காற்றில் பறந்த காலக்கெடுவும்!

Sunday, September 18, 2011
புலிகளின் அழிவிற்குப் பின்னர் தாமே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் எனக் கூறிச் செயற்பட்டுவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத் துடன் நடத்திய பத்துச் சுற்றுப் பேச்சு வார்த்தைகளின் பலன் எதுவும் கிடைக்க வில்லை எனக் கூறி வெளியேறி கோரிக்கை கள் சிலவற்றை முன்வைத்து அவற்றுக்கு அவசியம் பதில் தரவேண்டும் எனவும் அரசாங்கத்திற்குக் காலக்கெடு விதித்திருந்தது.

அரசு பதில் அளிக்காவிட்டால் இனிப் பேச்சுக்கே இடமில்லை என வீரவசனம் பேசப்பட்டு வந்த நிலையில் திடீரென்று அரசிடமிருந்து எவ்விதமான பதிலும் கிடைக்காத நிலையில் வெள்ளியன்று அரசுடன் மீண்டும் பேச்சை நடத்தியுள்ளதன் மர்மம் தமிழ் மக்களுக்குப் புரியாதுள்ளது. அதனை தமிழ்க் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு எடுத்துரைப்பதாகவும் இல்லை. இது தம்மைத் தாமே ஏமாற்றுவதுடன் தமக்கு வாக்களித்த தமிழ் மக்களையும் ஏமாற்றும் செயலாக உள்ளதாகத் தமிழ் மக்கள் விசனம் தெரிவிப்பதாக புத்தி ஜீவிகள் பலர் வாரமஞ்சரிக்குக் கருத்துத் தெரிவித்தனர்.

அரசாங்கம் தமிழ் மக்களின் நலன் கருதி பேச்சுக்களை இதய சுத்தியுடனே முன் னெடுத்து வந்தது. ஆனால் தமிழ்க் கூட்டமைப்பினர் தான் பொய்யான காரணங்களை முன்வைத்து பேச்சிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். அரசாங்கம் இன்னமும் தமிழர் பிரச்சினை தீர்வில் அதிக அக்கறையுடன் உள்ளது என அரச தரப்பில் உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பினரும் தொடர்ந்தும் பேச்சுவார்த் தைகளை நடத்துவது என இணக்கம் காணப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் முன் வைக்கப்பட்ட மூன்று நிபந்தனைகள் மற்றும் அதற்கு முன்னர் முன்வைத்த கோரிக் கைகள் தொடர்பில் ஆராய்வதற்கு அர சாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுத் திட்டமொன்றை முன் வைக்கும் முயற்சிகளை தொடர்வதாக இரு தரப்பினரும் இணங்கியுள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 3ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப் பிடத்தக்கது.

No comments:

Post a Comment