Thursday, September 22, 2011ஈரானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமது நாட்டு பிரஜைகள் விடுவிக்கப்பட்டமைக்கு அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா வரவேற்பு தெரிவித்துள்ளார்.
விடுவிக்கப்பட்டவர்கள் தமது உறவினர்களுடன் மீண்டும் இணைந்தமை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடரின் இடையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பரக் ஒபாமா மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
உளவு பார்த்த குற்றச்சாட்டில் கடந்த 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இரண்டு அமெரிக்கர்களுக்கும் ஈரானிய நீதிமன்றம் கடந்த மாதம் எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருந்தது.
இந்த நிலையில், ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பிணையினை செலுத்தியதன் பின்னர் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், தம் மீதான குற்றச்சாட்டுக்களையும் அவர்கள் நிராகரித்துள்ளனர்.
No comments:
Post a Comment