Thursday, September 22, 2011இலங்கை பொறியியல்துறையின் அறிவைப் பயன்படுத்தி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இரண்டு எரிபொருள் மின் உற்பத்தி நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இந்த மின் பிறப்பாக்க நிலையங்கள் மூலம் 200 மெகாவட் அலகுகள் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், பங்களாதேஷின் தேசிய கட்டமைப்புடன் அண்மையில் இணைத்துக்கொள்ளப்பட்டது.
குளிரூட்டல் கட்டமைப்பு, களஞ்சியப்படுத்தி வைக்கும் தாங்கிகள், பம்பி உபகரணங்கள், குறைந்த மின்வலு கொண்ட கட்டமைப்புகள், கண்காணிப்பு கட்டமைப்புகள் ஆகிய அனைத்தும் இலங்கையிலேயே உற்பத்தி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment