Thursday, September 22, 2011

நாட்டுக்கு எதிரான பெரிய சவால் தீவிரவாதம் : போலீஸ் கமிஷனர் குப்தா பேச்சு!.

Thursday, September 22, 2011
புதுடெல்லி: நாட்டுக்கு இப்போது மிகப் பெரிய சவாலாக தீவிரவாதம் உள்ளது என்று போலீஸ் கமிஷனர் பி.கே.குப்தா கூறினார்.
டெல்லி போலீசில் புதிதாக 460 பெண்கள் உட்பட 6,600 பேர், கான்ஸ்டபிள்களாக பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 4 நாட்களுக்கு முன் 2,022 பேரும், நேற்று 4,568 பேரும் பணியில் சேர்ந்தனர். இவர்களின் அணி வகுப்பு நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.
அணி வகுப்பு மரியாதையை ஏற்று கொண்டு ஆளுநர் தேஜேந்திர கன்னா பேசுகையில்,

நாட்டில் தீவிரவாதம் மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. தீவிரவாதத்தையும் குற்றங்களையும் ஒடுக்க போலீஸ் படை வலுவாக இருக்க வேண்டும். தீவிரவாதம் பற்றி எந்த தகவலையும் அலட்சியப்படுத்தாமல் விழிப்புடன் செயல்பட வேண்டும். அப்போது, தீவிரவாத தாக்குதல்களை தொடகத்திலேயே முறியடிக்க முடியும்.
டெல்லி தலைநகராக இருப்பதால், சட்டம் ஒழுங்கு சீராக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
மற்ற நகரங்களுக்கு முன்னோடியாக டெல்லி இருக்க வேண்டும். அதற்கு போலீசாருக்கு மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்றார்.

போலீஸ் கமிஷனர் பி.கே.குப்தா பேசுகையில், ‘நாட்டுக்கு இப்போது மிகப் பெரிய சவாலாக தீவிரவாதம் உள்ளது. இதை முறியடிக்க உளவுத்துறையை பலப்படுத்த வேண்டும். இப்போது, புதிதாக பணியில் சேர்ந்துள்ள காவலர்களுக்கு எல்லா பயிற்சியும் அளிக்கப்படும். தடயவியல் அறவியல், கணிப்பொறி பயிற்சி, மீட்பு நடவடிக்கைகள், தீவிரவாத தாக்குதல்களை முறியடிப்பது, சைபர் குற்றங்கள் தடுப்பு உட்பட எல்லா பயிற்சிகளும் அளிக்கப்படும். மகாராஷ்டிரா மாநிலம் நான்தெத்தில் உள்ள சி.ஆர்.பி.எப். பயிற்சி மையத்துக்கு 25 பெண் காவலர்கள் அனுப்பப்பட உள்ளனர். பணியில் கவனத்துடனும் உண்மையுடனும் காவலர்கள் ஈடுபட்டு, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.’ என்றார்.

புதிதாக சேர்க்கப்பட்டுள்ள காவலர்களையும் சேர்த்து டெல்லி போலீஸ் படையின் எண்ணிக்கை 63,762ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி டெல்லி போலீசில் 351 பெண்கள் உட்பட 5,967 கான்ஸ்டபிள்கள் பணியில் சேர்க்கப்பட்டனர்.

No comments:

Post a Comment