Thursday, September 22, 2011அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தினுள் வைத்து, ஹெரோய்ன் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறையிலிருந்து, நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்படுகின்ற தனது மகனுக்கு வழங்கும் நோக்கிலேயே சந்தேகநபரான பெண், ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது என பொலிஸார் குறிப்பிட்டார்...
வெளிநாட்டு நாணயத்தாள்களை கடத்த முயற்சித்த ஒருவர் கைது!
சட்ட விரோதமாக வெளிநாட்டு நாணயத்தாள்களை நாடு கடத்த முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூர் பயணிக்க தயாராகவிருந்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவரிடம் இருந்தே இந்தப் பணம் கைப்பற்றப்பட்டதாக சிரேஷ்ட சுங்க அத்தியட்சகர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்தார்.
இந்த சந்தேகநபரிடம் இருந்து 90 இலட்சம் ரூபா பெறுமதியான யூரோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment