Sunday, September 25, 2011

வங்கி கடனட்டை மோசடி சந்தேக நபரொருவர் கைது!

Sunday, September 25, 2011
வங்கி கடனட்டை ஒன்றினை வாகனமொன்றில் இருந்து திருடி 40 ஆயிரம் பணத்தினை வங்கி தன்னியக்க இயந்திரத்தில் இருந்து பெற்றுக்கொண்ட சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் வங்கிக் கடனட்டை திருடப்பட்டதாக கூறப்படும் வாகனத்தின் சாரதியாக கடமையாற்றி வந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் குறித்த கடனட்டை மூலம் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வங்கிகளின் தன்னியக்க இயந்திரங்களில் பணத்தை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரிடமிருந்து வங்கி கடனட்டை மற்றும் பணம் ஆகியன மீட்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபரை இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment