Friday, September 02, 2011
புலித் தலைவர்கள் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு நகைப்புக்குரியது என ஜே.வி.பி கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
புலிகளின் முக்கிய தலைவர்களுக்கு சொகுசு வாழ்க்கை அமைத்துக் கொடுத்துள்ள அரசாங்கம் சாதாரண சந்தேக நபர்களை தொடர்ந்தும் தடுத்து வைக்க சட்டங்களை இயற்றி வருவதாக ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுப்போரை ஒடுக்கும் நோக்கிலேயே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசாங்கம் வலுப்படுத்த உத்தேசித்துள்ளது.
அவசரகாலச் சட்டத்தில் காணப்பட்ட கடுமையான சட்டங்கள் தொடர்ந்தும் வேறு வழிகளில் அமுல்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, வடக்கில் தொடர்ந்தும் அரை இராணுவ ஆட்சி நிலவும் என அவர் தெரிவித்துள்ளார்.
குமரன் பத்மநாதன், கருணா, பிள்ளையான், ஜோர்ஜ் மாஸ்டர் போன்றவர்களுக்கு சொகுசு வாழ்க்கை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
எனினும், அவர்களினால் பயங்கரவாதிகளாக உருவாக்கப்பட்ட சாதாரண மக்கள் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment