Friday, September 02, 2011
சந்தேகத்திற்கு இடமான கப்பல்கள் எதுவும் கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிடவில்லை என இலங்கைக் கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
சீன உளவுக் கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.
எனினும், அவ்வாறான உளவு கப்பல்கள் எதுவும் இலங்கைக் கடற்பரப்பை அடைந்தமைக்கான சான்றுகள் கிடையாது என கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் கப்பல்களை முழுமையாக சோதனையிடும் அதிகாரம் கடற்படையினருக்கு காணப்படுவதாகவும், அண்மைக்காலத்தில் சந்தேகத்திற்கு இடமான கப்பல்கள் எதுவும் அவ்வாறு பிரவேசிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, 22 ஆய்வுகூடங்களுடன் கூடிய சீன உளவுக் கப்பல் இந்திய கடற்படையினரின் நடவடிக்கைகள் மற்றும் கடல் பிரதேசம் தொடர்பில் உளவுப் பணியில் ஈடுபட்டதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது.
No comments:
Post a Comment