Friday, September 02, 2011
அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் இரகசிய விமானமொன்று கொழும்பில் தரையிறங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீவிரவாத சந்தேக நபர்களுடன் இந்த விமானம் இலங்கையைச் சென்றடைந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
கைது செய்யப்படும் தீவிரவாதிகளிடம் விசாரணை நடத்தும் போது அமெரிக்க உளவுப் பிரிவினர் இரகசிய விமானங்களைப் பயன்படுத்துவது வழமையாகும். நடைமுறைசார் விளக்கங்களைப் பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு விமானங்களைப் பயன்படுத்தி சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்படுகின்றது.
அந்த வகையில் கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி அமெரிக்க உளவுப் பிரிவினர், தீவிரவாத சந்தேக நபர்களுடன் விமானம் மூலம் கொழும்பில் தரையிறங்கியுள்ளனர்.
செப்டம்பர் 11 தாக்குதல்களின் பின்னர், பயங்கரவாதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் ஓர் கட்டமாக இந்த விமானம் இலங்கைக்கு சென்றுள்ளது.
ஆப்கானிஸ்தான், இலங்கை, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளில் குறித்த விமானம் தரையிறங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆறு தீவிரவாத சந்தேக நபர்களுடன் குறித்த விமானம் பயணம் செய்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
No comments:
Post a Comment