Friday, September 02, 2011
இந்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனும் பங்கேற்றுள்ளார் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.லண்டனில் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று கைதிகளையும் விடுதலை செய்யுமாறு கோரி நடத்தப்பட்ட எதிர்ப்பு போராட்டத்தில் சிறிதரன் கலந்து கொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
லண்டனில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பிரதான உரையாற்றியுள்ளார் என பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் கலந்து கொள்வதற்கு லண்டனல் செல்ல வீசா வழங்கப்பட்டமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் லண்டன் செல்வதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வீசா கோரிய போது, அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment