Monday, September 26, 2011

சிறுவர் போராளிகளுக்கு மறுவாழ்வளித்து மீண்டும் அவர்களை சமூகத்துடன் இணைப்பதில் அண்மைக் காலத்தில் இலங்கை வெற்றிகொண்டுள்ளது- பிரான்சுவா ஜிமேரி!

Monday, September 26, 2011
சிறுவர் புலி போராளிகளுக்கு மறுவாழ்வளித்து மீண்டும் அவர்களை சமூகத்துடன் இணைப்பதில் அண்மைக் காலத்தில் இலங்கை வெற்றிகொண்டுள்ளது என மனித உரிமைகளுக்கான பிரான்ஸ் தூதுவர் பிரான்சுவா ஜிமேரி தெரிவித்துள்ளார்.

மேலும், மியன்மார், கொலம்பியா, இலங்கை மற்றும் கொங்கோ போன்ற நாடுகள் பல்வேறுபட்ட அணுகுமுறைகளை சிறுவர் போராளிகள் தொடர்பில் மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையைப் போன்று உகண்டாவும் சிறந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் ஐ.நா சபையின் அறிக்கையின் படி உலகளாவிய ரீதியில் 250,000 சிறுவர் போராளிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment