Monday, September 26, 2011

37 இலங்கையர்கள் இந்தியப் பொலிஸாரால் கைது!

Monday, September 26, 2011
இலங்கைப் பிரஜைகள் 37 பேர் இந்தியப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்ரேலியாவுக்கு தப்பிச் செல்லும் நோக்கில் தங்கியிருந்த போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

அவர்கள் தப்பிச் செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்திருந்த முகவர்கள் சிலரும் இதன்போது கைதுசெய்யப்பட்டதாகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கோதமங்கலம் பகுதியில் 28 பேரும் தாபியத்பரம்பு மாவட்டத்தில் ஒன்பது பேரும் கைதுசெய்யப்பட்டதாக தி ஹிந்து வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment