Monday, September 26, 2011
வீரவில்ல இராணுவ முகாமின் ஆயுத களஞ்சியத்தில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இந்த தகவல் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் திலின ஹப்புஆராச்சி எமது செய்திப் பிரிவிற்கு தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் திஸ்சமாற மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ தரப்பினர் தெரிவித்துள்ளனர்....
ஹம்பாந்தோட்டை வீரவில பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் சற்று முன்னர் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக தகவல்களை எமது இணையத்தளத்தில் எதிர்பாருங்கள். வெடிப்பு இடம்பெற்றுள்ளதை திஸ்ஸமகாராம பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

No comments:
Post a Comment