Monday, September 26, 2011சட்ட விரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை கையடக்கத் தொலைபேசிகளை கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக விமான நிலையத்தின் பிரதி சுங்கப் பணிப்பாளர் விராஜித் மஹேந்ர குறிப்பிட்டார்.
துபாய்யில் இருந்து வருகைதந்த குறித்த நபர்களிடமிருந்து சுமார் 300 கையடக்கத் தொலைபேசிகள் சுங்கப் பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரதி சுங்கப் பணிப்பாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment