Monday, September 26, 2011இலங்கைக்கு எதிரான யுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அமெரிக்க கிளை புலிகளுக்கு சுமார் 200 மில்லியன் டாலர்களை வழங்கியிருந்தது என்று தெரிவித்துள்ள ஐ. நாவின் இலங்கைக்கான பிரதி வதிவிட நிரந்தரப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா, இதுபோன்று மேலும் பல இரகசியங்களைத் தாம் அம்பலப்படுத்தப் போவதாகவும் சூளுரைத்துள்ளார்.
மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா தெரிவித்தார் எனக் கூறி இன்றைய திவய்ன பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் கூறுப்பட்டுள்ளதாவது,
அமெரிக்காவில் தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் பிரதான சூத்திரதாரியாகச் செயற்படுபவர் ருத்திரகுமாரனே. பிரபாகரனின் சட்ட ஆலோசகராக விளங்கிய ருத்திரகுமாரனும் புனர்வாழ்வுக் கழகமும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எவ்வாறு நிதி உதவிகளை வழங்கினர் என்பதனை நான் விரைவில் பகிரங்கப்படுத்துவேன். அத்துடன் அமெரிக்கப் படையினரால் பாரிய யுத்த நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் அதிசக்திமிக்க தொடர்பாடல் சாதனங்கள் புலிகள் வைத்திருந்தனர். அது குறித்த தகவல்களையும் வெளியிடுவேன் எனத் தெரிவித்துள்ளார் என திவய்ன கூறியுள்ளது.
No comments:
Post a Comment