Monday, September 26, 2011பலசூர்: அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று 350 கி.மீ. தொலைவில் உள்ள எதிரி இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் படைத்த பிருத்வி 2 ஏவுகணை, ஒரிசா கடல் பகுதியில் இன்று வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. தரையில் இருந்து புறப்பட்டு 500 கி.மீட்டருக்கு அப்பால் தரையில் உள்ள எதிரி இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட பிருத்வி வரிசை ஏவுகணைகள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வரிசையில் அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று 350 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் பிருத்வி 2 ஏவுகணைகளை இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு உருவாக்கியுள்ளது.
இந்த வகை ஏவுகணையும் இந்திய ராணுவத்தில் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது. 9 மீட்டர் நீளமும் ஒரு மீட்டர் விட்டமும் கொண்ட இந்த ஏவுகணை இன்று காலை ஒரிசா மாநிலம் பலசூர் மாவட்டம் சாந்திபூர் தீவில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை தளத்தில் பரிசோதித்து பார்க்கப்பட்டது. காலை 8.50 மணிக்கு விண்ணில் சீறிப்பாய்ந்த ஏவுகணை திட்டமிட்ட பாதையில் சென்று இலக்கை தாக்கியது. ஏவுகணை சோதனை முழு வெற்றி பெற்றுள்ளதாக ஏவுதள இயக்குநர் எஸ்.பி.தாஸ், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment