Friday,September,16,2011
நாட்டில் சிறுவர் போராளிகள் எவரும் கிடையாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
சிறுவர் போராளிகள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அறிவித்துள்ளது.
யுத்தத்தின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் சிறுவர்கள் ஆயுதக் குழுக்களினால் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டிருந்தது.
குறிப்பாக காணாமல் போயுள்ள சிறுவர்கள் ஆயுதக் குழுக்களில் அங்கம் வகிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், இலங்கையில் சிறுவர் போராளிகள் எவரும் கிடையாது என்பதனை உறுதிப்படக் கூற முடியும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
யுத்தம் செய்யும் நோக்கில் சிறுவர் போராளிகளை படைகளில் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை முற்று முழுதாக நிறுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.
சிறுவர் போராளிகளை இணைத்துக் கொள்ளும் நோக்கில் எவரேனும் செயற்பட்டால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் புலிகளும், பின்னர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும் சிறுவர் போராளிகளை போராட்டங்களில் ஈடுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட சிறுவர் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்து அவர்கள் மீள சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:
Post a Comment