Friday,September,16,2011கெழும்பு மாநகரசபையின் மேயர் பதவியை வகிக்கும் தகுதி மனோ கணேசனிற்கு கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஏணிச் சின்னத்தில் மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
எனினும், மனோ கணேசனினால் தேர்தலில் வெற்றியீட்டி மேயர் பதவியை பெற்றுக்கொள்ள முடியாது என அவரது சகோதரரும், ஆளும் கட்சியில் இணைந்து கொண்ட பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
மனோ கணேசனை விடவும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் மிலிந்த மொரகொட திறமையானவர் என குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது இதனைத் தெரிவித்துள்ளார்.
மாநகரசபைத் தேர்தலில் ஜனநாயக மக்கள் முன்னணி ஐந்து அல்லது ஆறு ஆசனங்களை மட்டுமே பெற்றுக் கொள்ளும் எனவும், அவரினால் மேயர் பதவியை பெற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment