Tuesday, September 13, 2011

இந்தியாவும் மேற்குலக நாடுகளும் நாட்டில் அரசியல் பிரிவினை வாதத்தை தூண்டுவதாக வீடமைப்பு அமைச்சர்-விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்!

Tuesday, September 13, 2011
இந்தியாவும் மேற்குலக நாடுகளும் நாட்டில் அரசியல் பிரிவினை வாதத்தை தூண்டுவதாக வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அரசியல் சாசனத்தில் 13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டுமென இந்தியாவும், மேற்குலக நாடுகளும் வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பிரிவினைவாதத்தை அரசியல் ரீதியாக தூண்டுவதற்கும், அரசியல் சாசனத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் முயற்சி எடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மஹரகம பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துத கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஒ பிளக்கின் விஜயம் தொடர்பிலும் கருத்து வெளியிட்டுள்ளார்.

அரசியல் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை நடத்துவது வழமையானது என்ற போதிலும், பிளக் இம்முறை பல்கலைக்கழக மாணவர்களுடனும் சந்திப்பு நடத்த உள்ளார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது ஓர் அசாதாரண நிலைமையாகவே கருதப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment