Tuesday, September 13, 2011

எவருடைய அழுத்தம் வந்தாலும் அவசரப்பட்டு அறிக்கை வெளியிடப்போவதில்லை - நல்லிணக்க ஆணைக்குழு!

Tuesday, September 13, 2011
அமெரிக்கா அல்ல எவருடைய அழுத்தம் வந்தாலும் அவசரப்பட்டு நாம் அறிக்கை வெளியிடப்போவதில்லை. எமது நிலைப்பாட்டில் இறுதிவரை உறுதியாக இருப்போம் என நல்லிணக்க ஆணைக்குழு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இலங்கை வரும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாகப் பல்வேறு தரப்பினருடனும் பேச்சு நடத்தவுள்ளார்.

இநத நிலையில், நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையை விரைவில் வெளியிடுமாறு அழுத்தம் வந்தால் ஆணைக்குழுவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் எனக் கேட்டபோதே ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் லக்ஷ்மன் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நவம்பர் மாதம் முதல்வாரத்தில் நாம் அறிக்கையை வெளியிட உத்தேசித்துள்ளோம். சற்றுத் தாமதமானாலும் அதற்கு முன்னர் வெளியிடமாட்டோம். எமது நிலைப்பாட்டில் நாம் சற்றேனும் தளராது இறுதிவரை செயற்படுவோம். அமெரிக்கா அல்ல. யார் அழுத்தம் கொடுத்தாலும் குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் நாம் அறிக்கை வெளியிட மாட்டோம். அதற்கான நேரமும் எமக்கில்லை என விக்ரமசிங்க கூறியுள்ளார்.

No comments:

Post a Comment