Tuesday, September 13, 2011
அவுஸ்திரேலியா நோக்கிச் செல்ல முற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களில் பலர் முன்னாள் புலி உறுப்பினர்கள் என பயங்கரவாதத் தடைப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
வடக்கு கிழக்கில் வாழ்ந்து வந்த முன்னாள் புலி உறுப்பினர்களே இவ்வாறு சட்டவிரோதமான முறையில் படகுகளின் மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு தப்பிச் சென்றவர்களே இவ்வாறு சட்டவிரோதமான முறையில் புகலிடம் கோர முயன்றுள்ளதாக பயங்கரவாதத் தடைப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
புகலிடக் கோரிக்கையாளர்கள் தலா 500000 செலுத்துவதாக வாக்குறுதியளித்து இந்தப் பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும், இதில் இருவர் ஏற்கனவே முற்பணமாக 100000 ரூபாவினை செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட 44 புகலிடக் கோரிக்கையாளர்களும் பூசா தடுப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

No comments:
Post a Comment