Tuesday, September 13, 2011
ஐக்கிய நாடுகள் நிபுணர்குழு அறிக்கை மனித உரிமைப் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில், தாரூஸ்மான் தலைமையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு குறித்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டதாகவும், இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பான் கீ மூனின் பேச்சாளர் மார்டின் நெசர்கீ தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இரண்டு தரப்பினரும் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சுயாதீன விசாரணைகளை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைப் பேரவை, பாதுகாப்புப் பேரவை போன்றவற்றின் கோரிக்கை அவசியமானது என பான் கீ மூன் முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment