Tuesday, September 13, 2011
பயங்கரவாதத்தைத் தோற்கடித்ததன் பின்னர் நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்றிட்டங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போது பல உலகநாடுகள் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளன.
இந்தக் கூட்டத் தொடர் சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் நேற்றைய தினம் ஆரம்பமாகியது.
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நிமல் சிறிபாலடி சில்வா, அனுர பிரியதர்ஷன யாப்பா, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சஜின் குணவர்த்தன ஆகியோர் இந்தக் கூட்டத் தொடரில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்தக் கூட்டத் தொடர் தொடர்பில் ஜெனிவாவில் இருந்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா நியூஸ் பெஸ்டுக்கு கருத்து வெளியிட்டார்.
தரூஸ்மான் அறிக்கை தொடர்பிலும் பயங்கரவாதத்தினைத் தோற்கடித்ததன் பின்னர் மேற்கொள்ளப்படும் புத்தாக்க மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலும், இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் இலங்கையின் நிலைப்பாடுகளை இதன்போது முன்வைத்ததாக அவர் தெரிவித்தார்.
அத்துடன் செனல் ஃபோ காணொளிக்கு எதிராகவும்,அதன் உண்மையற்ற தன்மையையும் நிரூபிப்பதற்கு இலங்கையால் தயாரிக்கப்பட்ட ஆவணப் படத்தை காட்சிப்படுத்துவதற்கு தமக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.
பயங்கரவாதத்தை தோற்கடித்ததன் பின்னர் நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்துவற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்திட்டங்கள் தொடர்பில் பல நாடுகள் தமது பாராட்டுக்களை இதன்போது வெளியிட்டுள்ளனர்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ,முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் சீனா, பாகிஸ்தான், மலேஷிய, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
அத்துடன் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள பொய்க் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதற்கு தமக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்

No comments:
Post a Comment