Thursday,September 15,2011
ஜெனீவாவின் தீர்மானங்களுக்கோ ஐ.நா. உட்பட அமெரிக்காவின் படைப் பலங்களுக்கோ இலங்கை ஒருபோதும் அஞ்சாது. மீள் தலையீடுகளுக்கு எவராவது முயற்சித்தால் அதனை எதிர்கொள்ள நாம் தயாராகவே உள்ளோம் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார்.
ரொபட் ஓ பிளேக் போர் குற்றச்சாட்டுக்களுக்கு அடிப்பணிய வைக்கவும், உள்நாட்டில் அதிகாரப் பகிர்வின் ஊடாக நாட்டை துண்டாடவுமே இலங்கை வந்தார். எனவே, அரசாங்கம் உடனடியாக பிரிவினைவாதத்திற்கு ஏதுவான காரணிகளை தேசிய அரசியலில் தடை செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக கலாநிதி குணதாச அமரசேகர மேலும் கூறுகையில், ஜெனீவா அமர்விற்கு பான் கீ மூன் நிபுணர் குழு அறிக்கையை அனுப்பி வைத்துள்ளார். ஏனைய நாடுகளுக்கும் அறிக்கையின் பிரதிகளை அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, ஏதாவது வழியை பின்பற்றி நாட்டிற்கு எதிரான சர்வதேச நடவடிக்கைகளை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை வெளிப்படையாகவே தெரிகின்றது.
இதற்கு அரசாங்கம் அஞ்சாமல் முகம் கொடுக்க வேண்டும். பிரிவினைவாத சர்வதேச சூழ்ச்சிக்காரர்களின் நோக்கம் இலங்கையை துண்டாடுவதே ஆகும். நிபுணர் குழு அறிக்கை 6 மாத காலத்திற்கு பின்னர் பேசப்படும் என்றால் அது பாரிய ஆபத்தானதாகவே அமையும். எவ்வாறாயினும் எந்தவொரு சர்வதேசத்தின் நடவடிக்கைகளுக்கும் தீர்மானங்களுக்கும் இலங்கை அடிபணியாது.
அமெரிக்கா இலங்கை மீதான தலையீட்டை அத்துமீறி மேற்கொள்கின்றது. ரொபட் ஓ பிளேக்கின் இலங்கை வருகை நாட்டிற்கு எதிரான காரியமாகவே உள்ளது. தமிழ் கூட்டமைப்பினரை அவர் சந்தித்தமையும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தமையும் பிரிவினைவாத போராட்டத்திற்கு மீண்டும் வித்திடும் நடவடிக்கை என்றார்.

No comments:
Post a Comment