Tuesday, September 27, 2011

இலங்கை விமானப்படை வின்ங் மகளிர் படையணியின் வருடாந்த முகாம்!

Tuesday, September 27, 2011
தேசிய மாணவர் படையணியின், விமானப்படை வின்ங் மகளீர் படையணியின் வருடாந்த முகாம் கடந்த செப்டம்பர் 6ஆம் திகதி முதல் செப்டம்பர் 15ஆம் திகதி வரை இலங்கை விமானப்படையின் தியதலாவ தளத்தில் இடம்பெற்றது.

இம் மகளிர் படையின் வெளியேறல் அணிவகுப்பு கடந்த செப்டம்பர் 14ஆம் திகதி இடம்பெற்றதுடன், இதில் தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஜீ.பீ.டபில்யூ ஜயசுன்தர ஆர்.டபில்யூ.பி ஆர்.எஸ்.பி அவர்கள் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு மரியாதையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இம் முகாமில் அணிவகுப்பு பயிற்சிகள், திசைக்காட்டி பயிற்சிகள், தன்னம்பிக்கையை வளர்க்கும் நோக்கிலான பயிற்சிகள் உட்பட பல ஆர்வமூட்டும் பயிற்சிகள் இடம்பெற்றதுடன் மாணவர்களும் இவற்றில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தனர்.
2ஆம் பெட்டாலியனை சேர்ந்த கண்டி ரிசிகலா கலைக் கல்லூரி முதலாமிடத்தை தக்கவைத்துக் கொண்டதுடன், 8ஆம் பெட்டாலியனை சேர்ந்த எம்பிலிப்பிடிய ஜனாதிபதிக் கல்லூரி இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

இறுதி வெளியேறல் அணிவகுப்பில் விமானப்படை தியதலாவ முகாமின் கொமடான், விமானப்படை மற்றும் தேசிய மாணவர் படையின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment