Tuesday, September 27, 2011

ஜே.வி.பியின் உட்கட்சி பிரச்சினையானது எதிர்க்கட்சிகளுக்கு பெரும் இழப்பு-ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க!

Tuesday, September 27, 2011
ஜே.வி.பிக்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினையானது எதிர்க்கட்சிகளுக்கு பெரும் இழப்பு என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளது.

ஜே.வி.பிக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளமையானது அரசாங்கத்திற்கு சாதகமான நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள அவர்,எதிர்க்கட்சியில் உள்ள பல கட்சிகள் இப்படியான நிலைமைகளை எதிர்நோக்கி வருவதாகவும் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்க்கட்சியாக இருந்த போது, இவ்வாறான நெருக்கடிகளை எதிர்நோக்கி வந்தது. இதனால் கட்சிகளுக்குள் ஏற்படும் பிரச்சினைகள் புதிதான விடயங்கள் அல்ல எனவும் அத்தநாயக்க மேலும் கூறியுள்ளார்

No comments:

Post a Comment