Tuesday, September 27, 2011கிளிநொச்சி புதிய மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றம், மற்றும் வவுனியா புதிய சிவில் மேன்முறையீட்டு மேல் நிதிமன்றம் என்பன பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க, நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோரால் எதிர்வரும் வியாழக்கிழமை (செப்-29) உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளன.
கிளிநொச்சி மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்றங்களை நிர்மாணிப்பதற்கு 15 மில்லியன் ரூபாவும், வவுனியா புதிய சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தை நிர்மாணிப்பதற்கு 26 மில் லியன் ரூபாவும் செலவிடப் பட்டுள்ளன.
முப்பது ஆண்டுகாலமாக நாட்டில் நிலவிய யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து. சில மாதங்களில் கிளிநொச்சி நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமான போதிலும், தற்காலிக கட்டடமொன்றிலேயே அவை இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment