Tuesday, September 27, 2011

2 நாள் சுற்றுப்பயணம்: காஷ்மீர் தர்காவில் ராகுல்காந்தி பிரார்த்தனை!

Tuesday, September 27, 2011
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி 2 நாள் சுற்றுப்பயணமாக காஷ்மீர் சென்றுள்ளார். அவரை மாநில காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்றனர்.

இளைஞர்களை பெருமளவில் காங்கிரசில் இணைக்கும் நோக்கத்தில் அவர் சென்றுள்ளார். ஸ்ரீநகரில் மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். மாநில நிலவரங்களை அவர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் இளைஞர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களையும் சந்தித்து பேசினார். அப்போது, தன்னை டெல்லி வந்து சந்தித்துகுமாறு மாணவர்கள் சிலருக்கு அழைப்பு விடுத்தார்.

ராகுல்காந்தி தனது சுற்றுப்பயண திட்டத்தில் இடம்பெறாத சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். புகழ்பெற்ற ஹஜ்ரத்பால் தர்காவுக்கு நேற்று இரவு திடீர் என்று சென்று பிரார்த்தனை செய்தார். தர்கா நிர்வாகிகள் அவரை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்.

கார்க்கிலில் இன்று நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திலும், புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள பஞ்சாயத்து பிரதிநிதிகளுடனான சந்திப்பு நிகழ்ச்சியிலும் ராகுல்காந்தி பங்கேற்கிறார்.

No comments:

Post a Comment