Tuesday, September 27, 2011

அவசரகாலச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட சிங்களப் புலி சந்தேக நபர் 4 வருடங்களின் பின்னர் விடுதலை!

Tuesday, September 27, 2011
அவசரகாலச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட சிங்களப் புலி சந்தேக நபர் 4 வருடங்களின் பின்னர் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாது யாழ் மேல் நீதிமன்றால் இன்று திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்..ராகலவத்த கல்லுணு ஓயாவைச் சேர்ந்த நிகால் சேரசிங்க என்பவரே விடுதலை செய்யப்பட்டவராவார். 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் மேற்குறிப்பிட்ட பகுதியில் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டு பின்னர் சி.ஐ.டி.யினரிடம் குறித்த நபர் ஒப்படைக்கப்பட்டார்.

குறித்த நபர் தொடர்பாக யாழ் மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் நடைபெற்று வந்த நிலையில் குறித்த நபர் தொடர்பாக குற்ற ஒப்புதல் வாக்குமூலமே குற்றச்சாட்டாக வைக்கப்பட்டிருந்த நிலையில் குறுக்கு விசாரணையின்போது சட்டத்திற்கு ஏற்ப இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போதுமான ஆதாரம் இல்லை எனக் கருதி வேறு ஏதாவது சான்று இருக்கின்றதா என அரச சட்டத்தரணியிடம் வினவியபோது அதற்கு வேறு சான்று இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த நபர் இன்றையதினம் யாழ் மேல் நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டார். இவ்வழக்குத் தொடர்பாக மனித உரிமைகள் சட்டத்தரணி றெமீடியஸ் ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment