Saturday, September 17, 2011அரச மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தரப்பு பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது இந்த இணக்கம் எட்டப்பட்டதாக பேச்சுவார்த்தையை அடுத்து விடுக்கப்பட்ட கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு தரப்பும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் அரசாங்க தரப்பு சார்பாக, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் தமிழ்த் தேசிய கூட்மைப்பின் பாராளுமன்றக் குழு தலைவர் ஆர்.சம்பந்தன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
அரசாங்க தரப்பு பிரதிநிதிகள் குழுவில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில், அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க, பாராளுமன்ற உறுப்பினரான சஜின் வாஸ் குணவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பாக ஆர்.சம்பந்தன் தலைமையில் ரி.சுமந்திரன், சரேஷ் பிரேமசந்திரன் உட்பட சிலரும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment