Saturday, September 10, 2011செனல் ஃபோ காணொளிக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட விளக்க காணொளி காட்சிகள் குறித்து மேற்குலக நாடுகள் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹெண தெரிவிக்கின்றார்.
இந்த விளக்க காணொளியை காண்பிக்குமாறு மேற்குலக நாடொன்றின் தூதரகத்திடம் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி குறிப்பிட்டார்.
செனல் ஃபோ காணொளித் தொகுப்புக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட விளக்கக் காணொளி கடந்த ஆறாம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் காண்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விளக்கக் காணொளிக்கு இதன்போது உயர்ந்தளவிலான வரவேற்பு காணப்பட்டதாக கலாநிதி பாலித்த கொஹொண கூறினார்.
No comments:
Post a Comment