Saturday, September 10, 2011

கடமையை சரிவர நிறைவேற்றாத பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!

Saturday, September 10, 2011
தாக்குதல்களுக்கு இலக்காகின்ற ஊடகவியலாளர்கள் தொடர்பில் கடமையை சரிவர நிறைவேற்றாத பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

கடந்த காலப்பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்கள் பல்வேறு தாக்குதல்களுக்கு இலக்கானதாக ஆணைக்குழுவின் செயலாளர் நிமல் புஞ்சிஹேவா கூறினார்.

சட்ட ரீதியான தமது பொறுப்புகளை அரச உத்தியோகத்தர்கள் சரிவர நிறைவேற்றாது விடின் அது அரசியல் அமைப்பின் பிரகாரம் அடிப்படை உரிமை மிறலாக கருதப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொலிஸார் நியாயமாக நடந்துகொள்ளாத பட்சத்தில் அது தொடர்பாக ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்யமுடியும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மேலும் தெரிவிக்கின்றார்.

No comments:

Post a Comment