Saturday, September 10, 2011

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்-அமெரிக்காவின் தெற்காசியாவுக்கான இராஜாங்க செயலாளர் ரொபேட் ஓ. பிளேக் எதிர்வரும் 12ந் திகதி சந்திப்பு!

Saturday, September 10, 2011
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் அமெரிக்காவின் தெற்காசியாவுக்கான இராஜாங்க செயலாளர் ரொபேட் ஓ. பிளேக்கை எதிர்வரும் 12ந் திகதி சந்தித்து உரையாடவுள்ளார்.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் 12ந் திகதி காலை 7.10 மணிக்கு நடைபெறும் இச்சந்திப்பில் பல்வேறு விடயங்கள் பற்றி இராஜாங்க செயலாளருடன் சம்பந்தன் உரையாடவிருப்பதாக தெரியவருகிறது.

கடந்த மாத பிற்பகுதியில் வரவிருந்த பிளேக், தவிர்க்க முடியாத காரணத்தினால் இலங்கை விஜயத்தை ஒத்திவைத்தார்.

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் இலங்கையின் நிலைவரம் தொடர்பில் கண்டறிவதற்கு வருகை தரும் பிளேக் இலங்கையில் தாம் சந்திக்கவுள்ள நிகழ்ச்சிப்பட்டியலில் முதல் முதல் இரா.சம்பந்தனை சந்திப்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விடயமென தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச்சந்திப்பின் போது தமிழ்ப்பேசும் மக்களின் பல்வேறு விடயங்கள் பற்றி சம்பந்தன் விரிவாக பேசவுள்ளதாக தெரியவருகிறது.

No comments:

Post a Comment