Saturday, September 10, 2011தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக கொண்டுசெல்லப்பட்ட 26 இலட்சம் ரூபா கொள்ளை!
நாவலப்பிட்டி, நாகஸ்தென்ன மற்றும் கந்தல்ஓயா தோட்டங்களின் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக கொண்டுசெல்லப்பட்ட 26 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது.
இநதப் பணம் நேற்று மாலை கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான பிரிஷாந்த ஜயக்கொடி குறிப்பிட்டார்.
தோட்ட அதிகாரி ஒருவர் உட்பட மேலும் இரண்டு பேர் தொழிலாளர்களுக்கான சம்பள தொகையை கொண்டு சென்ற போது ஆயுதமேந்திய சிலர் பணத்தைக் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக கூறியுள்ளனர்.
கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
சம்பவம் தொடர்பாக பொலிஸார்
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment