Monday, September 12, 2011

சுவிஸர்லாந்தின் ஜெனீவாவில் இன்றைய நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பிலான கூட்டத் தொடர் இடம்பெற்றது!

Monday, September 12, 2011
ஐக்கிய நாடுகள் சபைகள் செயலாளர் நாயகத்தினால் இலங்கை தொடர்பில் இலங்கை தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இன்று கருத்து தெரிவிக்கப்பட்டது.

சுவிஸர்லாந்தின் ஜெனீவாவில் இன்றைய கூட்டத் தொடர் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் மஹிந்த சமரசிங்க உள்ளிட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட ஏனைய நாடுகளைப் போன்று இலங்கையும் மீள்கட்டமைப்பு மற்றும் புத்தாக்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஜனநாயக நடவடிக்கைகள் மூலம் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு மக்களை பொருளாதார ரிதியில் வலுப்படுத்தி அவர்களுக்கு மோதல்களில் ஏற்பட்ட துயரங்களில் இருந்து மீண்டெழுவதற்கான எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்துவதே எமது இலக்கென அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் ஜனநாயகமான முறையில் சமாதானமும் அமைதியும் ஏற்படுவதற்கான நிலைமையினை பயங்கரவாதத்தினை தோற்கடித்தமை மூலம் அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. இது எமக்கு கிடைத்த பாரிய வெற்றியெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன் இலங்கை தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியரமித்த நிபுணர் குழுவின் அறிக்கையை ஐ.நா வன் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாக இம்மாதம் 09 ஆம் திகதி லஞ்சியோ கலந்துரையாடலின் போது தமக்கு அறியக்கிடைத்ததாக அவர் தெரிவித்தார்

எனினும் இது தொடர்பில் எவ்வித தகவல்களும் அறியக்கிடைக்கவில்லை இந்த விடயம் தொடர்பில் இரு தரப்பினரும் முன்றாம் தரப்பினர் ஊடாக அறிந்து கொண்டமை வியற்பிக்குரியது எனவும் இதில் முன்னிலைப்படுத்தப்பட்டு உறுப்பு நாடென்ற வகையில் இலங்கைக்கு இந்த விடயம் இறுதியில் தெரிவிக்கப்பட்டமை ஏற்றுக் கொள்ளமுடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மனித உரிமைகள் பேரவைளின் பணிகளை வெளிப்படைத் தன்மையுடனும் பக்கசார்பின்றியும் தெரிவுகளுக்கு உட்படுத்தாமலும் மனுத உரிமைகள் மேம்படுத்தல் குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்வார் என நாம் நம்புவதாகவும் இதில் இரட்டை நிலைப்பாடு மற்றும் அரசியல் மயப்படுத்தல் என்பன் தவிர்க்கப்பட வேண்டும் என்ற உண்மை அவர்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைப்பதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment