Monday,September,05,2011
வடமராட்சி யுத்தத்தில் ஏற்பட்ட தோல்வி காரணமாக முன்னாள் தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலியை, புலிகள் படுகொலை செய்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
வடமராட்சி தோல்வியைத் தொடர்ந்து ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் லலித் அத்துலத் முதலி ஆகியோரை படுகொலை செய்ய புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உத்தரவிட்ட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
லலித் அத்துலத் முதலி மீது பாராளுமன்றில் வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும், அதில் அவர் உயிர் பிழைத்துக் கொண்டார்.
மற்றுமொரு தடவை வீட்டிலிருந்து பல் மருத்துவரை சந்திக்கச் சென்ற போது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதல் முயற்சியிலும் லலித் அத்துலத் முதலி தப்பித்துக் கொண்டார்.
பாராளுமன்றில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து லலித் அத்துலத் முதலியின் நடவடிக்கைகளை புலிகள் தொடர்ச்சியாக கண்காணித்து வந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவிற்கும், லலித் மற்றும் காமினி ஆகியோருக்கும் இடையில் முறுகல் நிலைமையைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தாகக் குறிப்பிடப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் (தற்போது உயிருடன் இல்லை) பாபு என்ற விடுதலைப் புலி புலனாய்வுப் பிரிவு உறுப்பினரை பிரேமதாசவின் வீட்டில் பணிக்கு அமர்த்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
லலித், காமினி ஆகியோர் பிரேமதாசவை விட்டு விலகிச் சென்றதனைத் தொடர்ந்து குறித்த அமைச்சர் ஜனாதிபதியுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகிச் சென்ற காமினி திஸாநாயக்க மற்றும் ஜீ..எம். பிரேமசந்திரா ஆகியோரை பிரேமதாச கடுமையாக விமர்சனம் செய்த போதிலும் லலித் அத்துலத் முதலியை அவர் விமர்சிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு எதிராக குரல் கொடுத்த நபர்களில் லலித் அத்துலத்முதலி முக்கியமானவர் என பிரேமதாச கருதியதாகக் குறிப்பிடப்படுகிறது.
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கு அளிக்கப்பட்ட விருந்துபசாரத்தை லலித் மற்றும் பிரேமதாச ஆகியோர் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாபு மற்றும் இரண்டு பாதாள உலகக் கோஷ்டி உறுப்பினர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர் சந்திப்பு நடத்தியுள்ளார்.
இந்தத் தகவல்கள் உடனடியாக பிரபாகரனுக்கு பரிமாறிப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பு நடைபெற்று 24 மணித்தியாலத்திற்குள் லலித் அத்துலத் முதலி கிருலப்பிணை பிரதேசத்தில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
சிறுகுற்றச் செயல் ஒன்றுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர் ஒருவரை விடுதலை செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர் கிருலப்பணை காவல் நிலையப் பொறுப்பதிகாரி பிரேமலால் ரணகாலவிற்கு அழுத்தம் கொடுத்தாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இதற்கு குறித்த காவல்துறை உத்தியோகத்தர் கடும் எதிர்ப்பை வெளியிட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
எவ்வாறெனினும், குறித்த சந்தேக நபர் கிருலப்பணை பிரதேசத்தில் சயனைட் அருந்தி உயிரிழந்தார்.
லலித் அத்துலத் முதலி படுகொலை தொடர்பில் ஜனாதிபதி பிரேமதாச கடும் ஆத்திரமுற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
லலித் அத்துலத் முதலி படுகொலையுடன் தொடர்புடைய நபர்களின் பெயர் விபரங்கைள மே தினக் கூட்டத்தில் அம்பலப்படுத்துவதாக கிருலணப் பணையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் ஜனாதிபதி பிரேமதாச அறிவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியுடன் மிக நெருக்கமாக எந்த நேரத்திலும் அருகில் இருக்கும் குறித்த அமைச்சா பிரேமதாச மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அருகில் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு ஆங்கில ஊடகமொன்றில் லலித் அத்துலத் முதலி படுகொலைச் சம்பவம் பற்றிய உண்மைகள் என்ற தலைப்பில் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment