Monday,September,05,2011
தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக் இம்மாதம் 14ஆம் திகதி மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.
ஐரின் சூராவளி காரணமாக அமெரிக்காவின் விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டிருந்தமையினால் கடந்த மாதம் 29 ஆம் திகதி இடம்பெறவிருந்த ரொபர்ட் ஓ பிளேக்கின் விஜயம் இரத்துச் செய்யப்பட்டிருந்தது.
இவ்விஜயத்தின் போது சிரேஷ்ட அமைச்சர்கள், அரசியற் கட்சி தலைவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுடன் பிளேக் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை இடைநிறுத்தும் தொடர்கிறது - அஅமெரிக்கா!
இலங்கைக்கு ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை இடைநிறுத்தும் தீர்மானம் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு ஊடகங்களில் வெளியிட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவிப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு வழங்கப்பட்ட ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் வழங்குவது தொடர்பாகவோ வழங்காதிருப்பது தொடர்பாகவோ அமெரிக்க காங்கிரஸில் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை எனவும் தூதரகம் சுட்டிக்காட்டுகிறது.
இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த இவ்வரிச்சலுகை கடந்த ஜனவரி மாதம் தற்காலிகமாக முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment