Monday, September 5, 2011

செப். 9ல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ராஜீவுடன் கொலையானவர்களின் குடும்பத்தினர் அறிவிப்பு!

Monday,September,05,2011
சென்னை: பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தூக்கிலிடப்படுவதாக இருந்த செப்டம்பர் 9ம் தேதி தங்களது குடும்பத்தினருடன் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ராஜீவ் காந்தி படுகொலையின்போது உயிரிழந்த 15 பேரின் குடும்பத்தினரும் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து ராஜீவுடன் சேர்ந்து உயிரிழந்த முன்னாள் செங்கை மேற்கு மாவட்ட எஸ்.பி. முகம்மது இக்பாலின் மகன் ஜாவீத் இக்பால் கூறுகையில், இன்று ராஜீவ் காந்தி படுகொலைக்குக் காரணமான மூன்று பேருடைய தூக்கையும் ஆயுள் தண்டனையாக மாற்றக் கோரி பலரும் போராடி வருகின்றனர். அவர்கள் தமிழர்கள் என்பதால் இந்தக் கோரிக்கையை வைப்பதாக கூறுகின்றனர்.

ஆனால் அன்று உயிரிழந்த 15 பேரும் கூட தமிழர்கள்தான். அவர்களைப் பற்றி யாரும் அக்கறை கொள்ளாதது ஏன்? அவர்களுடைய குடும்பத்தினருக்கு 20 ஆண்டு காலமாகியும் நீதி கிடைக்காதது குறித்து ஏன் யாரும் கவலைப்படவில்லை?

எங்களது இழப்புகளை நாங்கள் அமைதியாக அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு நீதி தேவை. குற்றம் இழைத்தவர்கள் சட்டப்படி தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றார் இக்பால்.

No comments:

Post a Comment