Monday,September,05,2011
புலிகளின் ஊடக பேச்சாளராக கடமையாற்றிய தயா மாஸ்டர் மற்றும் மொழிப் பெயர்பாளராக கடமையாற்றிய ஜேர்ஜ் மாஸ்டர் ஆகியோருக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, இவர்கள் தொடர்பான மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் சட்டமாஅதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வோண்டும் என குற்ற விசாரணை பிரிவினர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.
2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி இவர்கள் இருவரும் ஓமந்தை காவல்துறையினரிடம் சரணடைந்தனர்.
பின்னர் மேலதிக விசாரணைக்காக குற்ற விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்தநிலையில், இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கொழும்பு பிரதான நீதவான் ரஸ்மி சிங்கப்புலி இந்த வழக்கை எதிர்வரும் 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
No comments:
Post a Comment