Monday, September 5, 2011

இராணவ முகாம் மற்றும் பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

Monday,September,05,2011
இராணவ முகாம் மற்றும் பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் பயங்கரவாதிகள், அவ்வாறானவர்களுக்கு எதிராக பயங்கரவாத சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

அண்மையில் இராணுவ முகாம்களை தாக்கமுற்பட்ட சுமார் 120 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புஹாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் பாதுகாப்பு தரப்பினர் மீது தாக்குதல் மேற்கொள்வதானது தீவிரவாத நடவடிக்கை என தெரிவித்த அவர் இவ்வாறான செயற்பாடு முற்றிலும் தவறானதொரு விடயம் எனவும் அதனை செய்பவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்நிலையில், பயங்கரவாதத்தினை தோற்கடித்தது போலவே நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்களுக்கு எதிராக இராணுவத்தினர் நடவடிக்கைகளை முன்னெடுப்பர் என அண்மையில் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்திருந்தார்.

அத்தோடு தீவிரவாதத்தை ஒழிக்க இராணுவத்தினர் எவ்வாறு செயற்பட்டனர் என்பதனை பொதுமக்கள் மறந்துவிடக்கூடாது என தெரிவித்த அவர் இராணுவத்தினருடன் கேலிக்கூத்தாடவும் முயற்சிக்கக்கூடாது என குறிப்பிட்டிருந்தார்.

தற்போது போலியான மர்ம மனிதன் பதற்றம் யாழ்ப்பாணத்தில் இல்லை எனவும் பொலிஸாரும் இராணுவத்தினர் அனைத்து நிலைமைகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் எனவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புஹாராச்சி தெரிவித்துள்ளார் என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment