Wednesday, September 21, 2011இடைநிறுத்தப்பட்டுள்ள ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீள வழங்குமாறு இலங்கை அரசாங்கம் அமெரிக்காவிடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவினால், அந்நாட்டு செனட்சபைக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சலுகைத் திட்டம் இடைநிறுத்தப்பட்டதன் பின்னர் பின்னர் இலங்கைப் பண்டங்களின் ஏற்றுமதி வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது என கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு அமெரிக்கா இந்த வரிச் சலுகைத் திட்டத்தை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க செனட் சபை கடந்த ஆண்டு வரிச் சலுகை நீடிப்பது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், இதனால் சலுகைத் திட்டம் இடைநிறுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் அதிகளில் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
வரிச் சலுகைத் திட்டம் இடைநிறுத்தப்பட்ட காரணத்தினால் சில வகைத் தொழில்கள் பின்னடைவினை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
No comments:
Post a Comment