Wednesday, September 21, 2011பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்கலை கட்டுப்படுத்தும் திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளின் போது சந்தேகத்திற்குரியவர்களின் நிதி, வங்கி கணக்கு, மற்றும் உடமைகளை தடைசெய்யும் அதிகாரம் பெறும் சட்டம் கொண்ட திருத்தம் இதில் உள்ளடங்கியுள்ளது.
இதுதவிர, வெளிநாட்டில் பயங்கரவாத நடவடிக்கைக்காக உள்நாட்டில் சொத்து சேகரிக்கப்படும் நடவடிக்கையையும் தடுக்கவும், இந்த சட்டத்தில் அதிகாரம் கிடைக்கிறது.
தற்போது, நிலவும் சட்டத்திட்டங்களுக்கு அமைய இவ்வாறான சந்தேக நபர்களுக்கு எதிராக நீதிமன்ற குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னரே நிதி மற்றும் சொத்துகள் தடைசெய்யப்பட்டு வருகின்றன. என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment