Thursday,September 15,2011
வடபகுதியில் மேற்கொள்ளப்படும் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ், இடம்பெயர்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு வீடுகள் பாரபட்சமின்றி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ சந்தசிறி தெரிவிக்கின்றார்.
முஸ்லீம் பிரதிநிதிகள் சிலருடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே வடமாகாண ஆளுனர் இதற்கான உறுதிமொழியை வழங்கியதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
வன்னியில் மீள்குடியேற்றப்படும் முஸ்லீம் மக்களின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வாழ்தார பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண்பதற்குறிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் வடமாகாண ஆளுநர் முஸ்லீம் பிரதிநிதிகளிடம் உறுதி மொழி வழங்கியுள்ளார்.
இதேவேளை வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் மின்சார இணைப்புகளுக்காக விண்ப்பத்தவர்களுக்கு பொருளாதரா அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸவுடன் தொடர்புகொண்டு இணைப்புகளை பெற்றுக்கொடுப்பதாகவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய மகா வித்தியாலயத்தில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பிரிவில் கல்வி கற்பிக்கும் தொண்டர் ஆசிரியர்கள் ஐவருக்கு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியில் இருந்து நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக ஜீ.ஏ.சந்திரசிறி கூறியுள்ளார்.

No comments:
Post a Comment