Thursday,September 15,2011
இடைநிறுத்தப்பட்டிருந்த தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்புக்கும் அரசு தரப்புக்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் மீண்டும் நாளை ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிய வருகிறது. இதற்கான அழைப்பு அரசு தரப்பிலிருந்து கூட்டமைப்புக்கு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதனை எம்மிடம் உறுதிப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தரப்பு, தாங்கள் கலந்து கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று தெரிவித்தது.
இதேவேளை, தமது கட்சியினால் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இதுவரை எவ்வித பதிலையும் வழங்காத நிலையில் மீண்டும் ஒரு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதில் அர்த்தம் இல்லை என்றும் இதனடிப்படையில் நாளைய சந்திப்பில் கலந்து கொள்ளக் கூடாது எனத் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலர் அதன் தலைமையைக் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனையடுத்தே கூட்டமைப்பு நாளைய சந்திப்பில் கலந்து கொள்வது தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவை இதுவரை எட்டமுடியாத நிலையேற்பட்டுள்ளதாகவும் அறிய வருகிறது.
இது இவ்வாறிருக்க, இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க ராஜாங்கச் செயலாளரான ரொபர்ட் ஓ பிளேக், தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு - அரசு தரப்பு பேச்சுவார்த்தையைப் பாராட்டியிருந்ததுடன் அது தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் கேட்டிருந்தார். இதன் காரணமாகவே அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாளைய பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இறுதியாக இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது அடுத்த கட்டப் பேச்சு தொடர்பில் திகதி குறிப்பிடாத நிலையில் அது ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இவ்வாறானதொரு நிலையிலேயே அரசாங்கம் நாளைய தினத்தை நிர்ணயித்துப் பேச்சுவார்த்தைக்குக் கூட்டமைப்பை அழைத்துள்ளது.
இது இவ்வாறிருக்க, தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் எவ்வித பதிலையும் வழங்காத காரணத்தை அடிப்படையாக வைத்து நாளைய கூட்டத்தில் கலந்து கொள்ளாது புறக்கணித்தால் அது அமெரிக்காவின் வேண்டுகோளை நிராகரிப்பதாக முடிவதுடன் இந்த விடயம் அரசுக்கு அது சார்பாகி விடுமாதலால் இது குறித்து நிதானமாகச் செயற்பட வேண்டியுள்ளதாகத் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் தலைமை கருதுகிறது எனவும் நம்பகமான தகவல்கள் எமக்குத் தெரிவித்தன.

No comments:
Post a Comment