Thursday,September 15,2011
வடக்கின் மீள்குடியேற்ற நடவடிக்கை மற்றும் அங்கு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க துணை ராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளக் வெளியிட்ட கருத்துக்கு, அரசாங்கம் மகிழ்சி வெளியிட்டுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும், செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றிய பிரதி அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
ரொபர்ட் ஓ பிளக் கடந்த காலங்களில் வந்திருந்ததை விட, இந்த முறை தமது விஜயத்தின் போது தெரிவித்த கருத்துக்கள் வரவேற்கத் தக்கன.
மீள்குடியேற்றம், நிலக்கண்ணி வெடி அகற்றல் போன்ற செயற்பாடுகளை அவர் வரவேற்றுள்ளார்.
இந்த முறை அவரது இலங்கையை வித்தியாசமான பார்வைக் கோணத்தில் அவதானித்துள்ளார் என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அலரி மாளிகையில் மேற்கொள்ளப்படுகின்ற நிகழ்வுகள் தொடர்பாக, ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்ட கருத்துக்கும் இதன் போது பதில் வழங்கப்பட்டது.
தேர்தல் காலங்களில் அலரி மாளிகையில் தன்சல் வழங்கப்படுவதாக திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆனால், மகிந்த ராஜபக்ஷவின் குடும்பம், சிறந்த விருந்துகளை வழங்கும் குடும்பம் என பிரதி அமைச்சர் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு வழங்கப்படுகின்ற தன்சல்கள், பொது மக்களின் பணத்தில் அன்றி, ராஜபக்ஸ குடும்பத்தின் நிதியில் வழங்கப்படுகின்றவை எனவும் அவர் விளக்கமளித்தார்.
இதேவேளை, எதிர்வரும் ஒக்டோபர் 3ம் திகதி முதல் 9ம் திகதி வரையில் தேசிய சுகாதார வாரமாக பிரகடனப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அமைச்சரவை அந்தஸ்த்தும் கிடைத்துள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment