Thursday,September 15,2011
பா.ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து திருவட்டாரில் இருசக்கர வாகன பேரணி, பொதுக்கூட்டம் நடந்தது. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேரணியை தொடங்கி வைத்தார். மாலையில் திருவட்டார் பஸ் நிலையம் சந்திப்பில் பேரணி நிறைவடைந்தது. அங்கு பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் சிறப்புரை யாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் பா.ஜனதா எழுச்சி பெற்றுள்ளது. தற்போது புது வேகத்தில் வளர்ந்து வருகிறது. 1947ல் சுதந்திரம் கிடைத்ததில் இருந்து இந்தியாவை அதிகமுறை காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. காங்கிரஸ் அரசின் நிலையற்ற கொள்கைகளால் மக்கள் அவதிபடும் நிலை உள்ளது.
1974ல் கச்சதீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. இதனால், தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இலங்கை ராணுவத்தினர் தமிழக மீனவர்களை சுட்டு கொல்கிறார்கள். எனவே, கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும். அதுவரை பா.ஜனதா தொடர்ந்து போராடும். இலங்கை தமிழர்களுக்காக அனைவரும் இணைந்து போராட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:
Post a Comment