Thursday, September 15, 2011

அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை?

Thursday,September 15,2011
அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நாளைய தினம் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்திற்கு சில நிபந்தனைகளை விதித்ததன் காரணமாக பேச்சுவார்த்தைகள் இடைநடுவில் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேசிய இனப்பிரச்சினைக்கான அரசாங்கத்தின் தீர்வுத் திட்டத்தை எழுத்து மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்திருந்தது.

அரசாங்கத்துடனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்கத் துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்பத் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அழுத்தங்கள் அதிகரித்து வரும் பின்னணியில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அரசாங்கம் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment