Monday,September,05,2011
பொலிஸ் கிளியரன்ஸ்” பெறுவதற்கு வசதியாக பொலிஸ் தலைமையகம் எஸ்.எம்.எஸ். சேவையை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது. பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற வைபவத்தில் பொலிஸ் மாஅதிபர் நிஹால் இலங்கக்கோன் முதலாவது குறுந்தகவலை அனுப்புகிறார்.
பொலிஸ்” கிளியரன்ஸ்’ பெறுவதற்காக பொலிஸ் தலைமையகத்தில் ஒப்ப டைக்கப் பட்ட விண்ணப் பப்படிவம் தொடர்பான தகவல்களை விண்ணப்பதாரி அறிந்துகொள்ளும் வகையில் பொலிஸ் திணைக்களம் 1919 என்ற புதிய எஸ்.எம். எஸ். சேவையை நேற்று அறிமுகப் படுத்தப்பட்டது.
பொலிஸ் கிளியரன்ஸ¤’ க்காக பொலிஸ் திணைக்களத்தில் ஒப்படைக் கப்பட்ட விண்ணப்பப்படிவத்தின் பிரகாரம் கிளியரன்ஸ் எப்போது கிடைக்கும் என்பது பற்றி 1919 என்ற இலக்கத்துக்கு எஸ். எம்.எஸ் செய்வதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்
நேற்று 3 ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் இப்புதிய திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். பொலிஸ் திணைக்களம், தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்துடன் இணைந்து இத் திட்டத்தை அறிமுகப் படுத்துகிறது
No comments:
Post a Comment